Ø பிள்ளைகளுக்கு நிறைவான அன்பையும், பாதுகாப்பையும் வழங்கல்.
Ø மனதுக்குப் புத்துயிர் ஊட்டும், அறிந்து
கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுதல்.
Ø புதிய ஆக்கங்களைப் பிறப்பிக்கும்
ஆற்றலை வளர்த்தல்.
Ø சிறுவர்களின் உள்ளார்ந்த
ஆக்கத்திறன்களை வெளிக்கொணர்வதற்கு சுதந்திரமான, சுமுகமான
வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தல்.
Ø மாணவர்கள் வரையும் சித்திரங்களை
வகுப்பறை மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் காட்சிப்படுத்தி பரிசு வழங்கல்.
Ø சுற்றுலாக்கள், வெளிக்களக் கற்கைகள், நேரடி தரிசனம்
போன்ற முறைகளைக் கையாண்டு மாணவர் மத்தியில் சிறந்த புலக்காட்சியை ஏற்படுத்த வழி
வகுத்தல்.
Ø பாடசாலை மட்டத்தில் கோட்ட மட்டத்தில்
வலய மட்டத்தில் சித்திரக் கண்காட்சிகளை நடத்தி பிள்ளைகளின் வரைதல் திறனை
வளர்ப்பதற்கு ஆவன செய்தல்.
அறிந்து
கொள்ளும் ஆர்வ விருத்தியும், விவேக சிந்தனை விருத்தியும் சித்திரம்
வரையும் ஆற்றல் விருத்திக்கு அத்திவாரமாய் அமைகின்றன. புலன்களால் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) வெளி உலகம் தொடர்பாக பெற்றுக்
கொள்ளும் தகவல்களைப் பொருள் பட மனதில் ஒழுங்கமைத்துக் கொள்ளும் திறனையே இது
குறிக்கும். இவ்விருத்தியின் பின்னணியில் தான் சிறுவர்களின் சித்திரங்கள் வளர்ச்சியடைகின்றன.
படத்தை ஊடகமாகக்
கொண்டு சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் வெளிப்பாடு அவர்களது முதிர்ச்சிக்கேற்ப எளிய
நிலையில் இருந்து சிக்கலான நிலை வரை படிப்படியாக விருத்தியடைகிறது. இவ்வாறான விருத்தி தொடர்பாகச் சிறுவர் சித்திரங்கள்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது அறிந்துகொள்ள முடிந்த சில விடயங்கள் கீழே
தரப்பட்டுள்ளன.
ü
சித்திரம் வரைவதில் பிள்ளைகள் காட்டும்
ஆர்வம் ஒரு குறிப்பிட்ட (ஊகித்தறியக் கூடிய) கோலத்திற் கேற்ப நிகழ்கின்றது-
ü
இக்கோலம் தனித் தனியாக இனங்காணக் கூடிய
பல படிகளைக் கொண்டது.
ü
இப்படிகளின் ஒழுங்கு முறை அனைவருக்கும்
பொதுவானது.
ü
ஒரு படியிலிருந்து அடுத்த படிக்குச்
செல்வதற்குச் செலவாகும் காலம் ஒவ்வொரு பிள்ளைக்கேற்ப வேறுபடும்.
“Mental and Scholastic Test” என்னும் நூலில் சிரில் பேட் என்பவர் சிறுவர்களின் சித்திர
அபிவிருத்திப் படிகளை விளக்கி உள்ளார். அவர்களின் சித்திரங்களை பின்வரும் அம்சங்களின்
கீழ் பார்க்கலாம்.
v
மனித உருவங்களை வரைதல்
v
வெளியைக் காட்டுதல்
v
நிறங்களைப் பயன்படுத்துதல்
v
திட்டமிடல்
“பிள்ளைகளின் வரைதல்
திறனை வளர்ப்போம்”
Perfect..
ReplyDeletethank you
ReplyDelete