Friday, April 13, 2018

உங்கள் குழந்தைகளுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்..!


பெற்றோர்களே எச்சரிக்கையுடன் இருங்கள்.!!!
குழந்தைப் பருவத்தில் நொறுக்குத் தீனிப் பொருட்கள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவர்கள்
குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து பேசும் போது நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்திற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர்.

நொறுக்குத்தீனி
நொறுக்குத்தீனி சாப்பிடுவது மட்டுமே புற்றுநோய் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது, ஆனால் அதற்கான பல முக்கிய காரணங்களில் ஒன்று நொறுக்குத்தீனி என அவர்கள் கூறுகின்றனர்.
அதிக அளவில் இரசாயனம் கலக்கப்பட்டுள்ள பிஸ்கட், சிப்ஸ், பொரிக்கப்பட்ட கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள் மற்றும் செயற்கை வண்ணங்களை கொண்ட இரசாயன பழச்சாறுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும் குழந்தைகள், ஆரோக்கியம் இல்லாமல், இளவயதில் புற்றுநோய் நோயாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சுமார் இருபது சதவீத நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான முதன்மையான காரணமாக இருப்பது முறையற்ற உணவுபழக்கம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல கடைகளில் தந்தூரிசிக்கன் என்ற பெயரில் கோழி இறைச்சி மீது பல விதமான இரசாயனங்களை தடவி, எண்ணெய்யில் பொரித்து விற்கிறார்கள். குழந்தைகளுக்கு தேவையற்ற அளவில், பக்கெட் சிக்கன், சிக்கன் 65, சில்லி சிக்கன் என பல பெயர்களில், இந்தக் கோழி இறைச்சி விற்கப்படுகிறது. இது முற்றிலும் ஆபத்தானது என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன.

துரித உணவு

தேவைக்கு மீறிய அளவில், பொரித்த துரித உணவுகள், பெரிய சூப்பர் மார்க்கெட்களில் கழிவு விலையில் (discount) விற்கப்படும் பிஸ்கட், கேக் போன்றவை, இலவச பொருட்களுடன் விற்கப்படும்.
நொறுக்குத்தீனிகள் , சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் விளம்பரம் செய்யும் இரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உண்மையிலே பெற்றோர்களின் உணவுப் பழக்கம் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கும், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு புரிய வைக்க பெற்றோர்கள் முயற்சி செய்வது தான் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற அவர்கள் செய்யும் முதல் முயற்சியாகும்.

1 comment: