1. விளையாட்டு பாடல்
ஆலையிலே சோல்பிலே
ஆலங்காடிச் சந்தைையில
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
கிறிக்கியடிக்கப்
பாலாறு, பாலாறு, பாலாறு
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அண்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கிக்கட்டு இறுக்கிக்கட்டு
கீழாறோலை மேலாரிக்காலம்
எண்ணிப் பார்ப்பால் - பதினாறோலை
புள்ளும் பம்பரமும்
பாலாறு பாலாறு பாலாறு
2.புகை வண்டி
சுக்கு பக்கு சுக்கு பக்கு புகை வண்டி
ஊர்ந்து போகும் புகை வண்டி
பெட்டிகள் கோர்த்த புகை வண்டி
கூ கூ கூ எனகத்தும் புகை வண்டி
ஊரூராய் போகும் புகை வண்டி
சுக்கு பக்கு சுக்கு பக்கு புகை வண்டி
பச்சைக்கொடியை கண்டால் பயந்திடுவான்
மஞ்சள் கொடியை கண்டால் சிரித்திடுவான்
பச்சை கொடியை கண்டால் பாய்ந்து ஓடிடுவான்
அவனே எங்கள் உரை சுமக்கும் புகை வண்டி ............
3.கடற்கரை விளையாட்டு
கண்ணாமூச்சி ரே ரே
காட்டு மூச்சு ரே ரே
உனக்கொரு பழமும்
எனக்கொரு பழமும் கொண்டு வா
கண்ணாம்பூச்சி கடற்கரை பூச்சி எங்கே எங்கே
கண்ணாம்பூச்சி கடற்கரை பூச்சி எங்கே எங்கே
4.சின்ன விளையாட்டு
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததாம்
இரண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததாம்
மூன்று குடம் ......
.......
....
பத்து குடம் தண்ணி ஊத்தி பத்தே பூ பூத்ததாம்
5.குத்து பாடல்
என்ன அன்னம் சொத்தன்னம்
என்ன சோறு பழன்சோறு
என்ன பலம் வாழைப்பழம்
என்ன வாழை திரி வாழை
என்ன திரி விளக்கு திரி
என்ன விளக்கு குத்துவிளக்கு
என்ன குத்து கும்மாங்குத்து
6.மழை வருது
மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
முக்காப்படி அhpசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையூங்க
சும்மா வரும் மாப்பிள்ளைக்கு
சூடு வையூங்க.
7.கொக்கு
கொக்கு வெள்ளை கொக்கு
குளத்தங் கரைக் கொக்கு
துpக்கு எட்டும் சென்று
திரும்பி வரும் கொக்கு.
வாடி நிற்க்கும் கொக்கு
வளைந்து நிற்கும் கொக்கு
நாடி நின்று மீனை
பிடிக்கும் கொக்கு.
காலைத் துhக்கி நின்று
கடவூள் அருளைக் கண்டு
வேளை மூன்றும் உண்டு
வணங்கும் இந்தக் கொக்கு
-சாரணா கையூம்-
8.தங்கை
தங்கை என்றன தங்கை
தள்ளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை .
பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யூம் தங்கை
வூட்ட நிலவைக் காட்டி
வாங்க சொல்லும் தங்கை
பாட்டுச் சொல்லித் தந்தால்
பாடி ஆடும் தங்கை
பாடடி மடியில் சென்று
படுத்தக் கொள்ளும் தங்கை.
-சாரணா கையூம்-
9. ஆட்டுக் குட்டி
துள்ளி வரும் ஆட்டுக் குட்டி
துணிந்து வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவயோ?
பாடம் சொல்லித் தருவாயோ?
கள்ளம் இல்லை உன் மனதில்
கபடம் இல்லை உன்மனத்தில்
hள்ளம் மேடு எது வந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி.
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் டே;டு வீட்டையே
சுற்றி வரும் ஆட்டுக்குட்டி.
10. எறும்பு
சின்ன கின்ன எறும்பு
சிங்கார சிற்றெறும்பே
உன்னைப் போல் நானும்
உழைத்திடவே வேணும்
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊh;ந்து போவீh; நன்றாய்
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே.
No comments:
Post a Comment