Wednesday, May 1, 2019

காடுகளின் முக்கியத்துவம்


காடுகள் 
மரங்களின் அடர்ந்த நிலப்பகுதி காடுஎன்றுஅழைக்கப்படும். புவிமேற்பரப்பின் 9.4%அல்லதுமொத்தநிலப்பரப்பின் 30%காடுகளினால் சூழப்பட்டுள்ளது. முட்காலத்தில் காடுகள் நிலப்பரப்பில் 50%வரைமுடியிருந்ததாகமதிப்பிடப்பட்டுள்ளனர். பூமியின் உயிர்த்தொகுதியில் 80% காடுகள் கொண்டிருக்கின்றன.


உலகலாவியரீதியில் காடுகளை ஏழு பெரும் பிரிவூகளாகபிரிக்கலாம
1.   அயனமழைக்காடுகள்:-
தென் அமெரிக்கா, மத்தியஅமெரிக்கா,ஆசியா,ஆபிரிக்கா,பசுபிக் சமுத்திர தீவுகள்
2. இடைவெப்பவலயக்காடுகள் :-
 வடஅமெரிக்காவின் கிழக்குப்பகுதி  ஐரோப்பாவின் வடக்குப்பகுதி,மத்தியப்பகுதி, ஆசியாவின் கிழக்குப்பகுதி (கொரியா, ஜப்பான்,கிழக்குச்சீனா) அவூஸ்ரேலியாவின் கிழக்கு மற்றும் தென்கரைரேப்பகுதி தென்மெரிக்காவின் மேற்கு கரையோரத்தை அண்டியப்பகுதி
     3.  மத்தியத்தரைக்காடுகள் :-
மத்தியத்தரைக்கடலை சூழ்ந்த ஐரோப்பாவின் தென் பகுதி மற்றும் ஆபிரிக்காவின் வடப்பகுதி வடஅமெரிக்காவின் கலிபோர்னியாக்கரையோரம் தென் அமெரிக்காவின் மேற்குக்கரையோரம்
தென் ஆபிரிக்காவின் கேப்டவூன் பகுதி அவூஸ்ரேலியாவின் பேர்க்  
 அட்லான்டா சேர்ந்தப்பகுதி
     4.தைக்காகாடுகள்:-
கனடாவின் வடக்கரையோரம் வடஐரோப்பாவில் இருந்துசைபீரிஸ் வரையானப்பகுதி
5.துந்திராக்காடு
                          i.ஆட்டிக் துந்நிரா :-                        வடஅமரிக்கா,ஐரோப்பாஇஆசியா,கிறின்லாந்தின்  வடதுருவத்தைஅண்டியப்பகுதி
                          ii.  அல்ப்பைன் துந்திரா :- எவரஸ்ட்இஅல்ப்ஸ்மலைசிகரங்கள்
6.            புல்நிலங்களும்,சவன்னாக்களும்
7.            பாலைவனங்கள்

காட்டின் நன்மைகள்
  1. காடுகள்அதிகளவு  உயிர்ப்பல்வகைமை கொண்டதாககாணப்படுவதுடன் வாழ்வதட்குஉகந்த சூழலை உருவாக்குவதில் காடு மிகமுக்கியப்பங்கு வகிக்கின்றது.
     2.உலகில் உள்ளகால்நடைகள் தமதுதீவனத்திற்குகாடுகளையேநம்பியூள்ளன.
3.       பெரும்பாலானதெழிற்சாலைகள் காடுகளையேநம்பியூள்ளன.
i.காகிதம் - மூங்கில்இதைலமரம்இகுடைவேல்
ii.ரேயான் - தைலமரம்
iii.பட்டைமரம் - வாட்டில் மரம்
iv.மரப்பொம்மைகள் - மஞ்சக்கடம்புஇசெஞ்சந்தனம்
v.தீக்குச்சி-அயிலைஇ முள்இ இலவூ
vi.பஞ்சு - இலவம் மரம்
vii.வாசனைஎண்ணெய் - சந்தனமரம்
viii.தைலஎண்ணெய் சோப்புவேம்புஇபுங்கம்இ இலுப்பை
 3.காபனீரொட்சைட்டின் அளவை குறைத்து ஒட்சிசனின் அளவை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.
  4.ஆவியூயிர்ப்புத் தொழிட்பாட்டின்  முலம் வளிமண்டலத்தில் நீராவியின் செரிவை அதிகரிக்கச் செய்வதுடன்,உயர்ந்தக்காடுகள் காற்றுக்களை தடுத்து மழை வீழ்ச்சியை கொடுக்கின்றன.
     5.காடுகள் எரிபொருட்களும், தளப்பாடங்களுக்குரிய மூலப்பெருட்களுக்காவும் பயன்படுவதுடன்  மருந்துகளுக்காகவும்  பயன்படுகிள்றன.
     6.தாவரப்போர்வை மிகுந்தப்பகுதிகளில் காற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதாகவூம் காணப்படும். அத்துடன் புயற் காற்றுக்கள் விருத்திப்பெருவதும் தாவரப்போர்வையினால் கட்டுப்படுத்தப்படும்.
     7.காடுகள் மண்ணரிப்பு, மண் வறட்சி,மண்சரிவு போன்றவற்றை குறைவடைய் செய்து மண்ணை பாதுகாக்கின்றது.
     8.மழைநீர் பெருமளவுகழுவூ நீரோட்டமாக செல்வதனைப் பாதுகாத்துதரை கீழே  பெசிவூநீராக  செல்வதற்கு  தாவரங்கள் துனைப்புரிகின்ற
     9.நதிகளுக்கருகில் மரங்கள் காணப்படுவதனால் வெள்ளப்பெருக்கைகட்டுப்படுத்துவதுடன் நீரானதுவேகமாகபாயந்து நதிக்கரையோரத்தை அரிப்புக்குள்ளாக்காது பாதுகாக்கின்றது.

காடழிப்பிட்கான காரணங்கள்
1.இன்றயஉலகில் சனத்தொகைஅதிகரிப்பிட்கு ஏற்பஅவர்களின் தேவைகளும் அதிகரிக்கின்றன. ஆதனால் காடுகள்  அழிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்கள்க மாற்றப்படுகின்றனஅதுமட்டுமன்றிஅதட்குரிய போக்குவரத்து பாதைகளை அமைப்பதற்காக காடுகளை ஊடறுத்துச்செல்லக்கூடியவீதிகள் அமைக்கப்படுகின்றப்போது அறுகாமையில் உள்ளகாடுகள் அழிக்கப்படுகின்றன.
2.உணவுற்பத்தியை அதிகரிக்கவேண்டியத்தேவையூம் ,வர்த்தக விருத்தியூம் ஏற்பட்டக்காரனத்தினால் பயிர்ச்செய்கை நவெடிக்கைகள் பெருமளவில் அதிகநிலப்பரப்பில் மேற்கொள்ளணேடியத்தேவை ஏற்பட்டது. இறப்பர்,தேயிலை,கோப்பி எண்ணெய்த்தாவரங்ஙூள் முதலியவற்றால் காடுநிலப்பரப்புக்கள் குறைவடைகிள்றன.
3.மரப்பலகைகள்,மரக்குற்றிகள்,மரக்கூழ்,கடதாசிபோன்ற காட்டு உற்பத்திகளின் அளவூஅதிகரிப்பதனால் காடுகள் அழிக்கப்படுவதுடக் பெருமளவில் வைரமான மரங்களான முதிரை,தேக்கு,பாலைமுதலிய பலகைகள்,தலப்பாடங்கள்  போன்றவற்றுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன.
4.இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படுகின்ற காட்டுத்தீயினால் காடுகள் அழிவடைகின்றன.
5.இரத்தினக்கல் அகழ்வு இகாரியஅகழ்வு இரும்பு அகழ்வு முதலிய நடவெடிக்கையினாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.
6.விறகுகளை எடுத்தல், இலாபமீட்டும் நோக்கில் சட்டவிநோதமான முறையில் மரங்களை எடுத்தல் போன்றவற்றினாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.
7.யூத்த நடவெடிக்கையினாலும் பெருமளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன.
8.மின்சாரநடவெடிக்கையினாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.

காடழிப்பதனால் ஏற்படம் விளைவுகள்
1.பிரதேசங்களில் மழைவீழ்ச்சி நீடிப்பதும் குறைவடைவதும் காடுகளிலேயே தங்கியூள்ளது.
2.தாவரங்கள் நிலப்பரப்பில் ஒரு போர்வையாக காணப்படுவதனால் மழை வீழ்ச்சியானது நேரடியாக நிலத்தில் விழுவதனை தடுக்கிறது. ஆத்துடன் தாவரவேர்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் மண் அரிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கின்றது.
3.புவிவெப்பமடைவதில் பச்சைவீட்டுவாயூக்கள் முக்கியம் பெறுகின்றன.பச்சைவீட்டு வாயூக்களில் காபனீரொட்சைட்டு வாயுமிக முக்கியமானது. காடுகள் அழிக்கப்படுகின்றப்போது காபனீரொட்சைட்டை உரிஞ்சும் நெயற்பாடு குறைவடைந்து வளிமண்டல சமநிலை பாதிப்படைந்து புவிவெப்பம் அதிகரிக்கும்.
4.காடுகள் அழிக்கப்படும் பிறதேசத்தில் நேரடியாகஆவியாக்கம் இடம்பெருவதனால் குறிப்பிட்டபிரதேசத்தில் வரட்சி நிலமை உருவாகும்.
5.உற்பத்தியாலரான தாவரங்கள் அழிவடைவதனால் அதனைதங்கியுள்ள விலங்குகள் அழிவடைந்து உயிர்ப்பல்வகைமை பாதிப்படைகின்றது.
6.மண்ணிண் ஈரத்தன்மை குறைவடைதல்
7.காற்றின் வேகம் அதிகரித்தல்.
8.வெள்ளப் பெருக்கு ஏற்படல்.

காட்டுவளத்தைபாதுகாக்கும் நடவெடிக்கைகள்
1.மழைக்காடுகளைபேனிப்பாதுகாப்பதட்கானகொள்கைகள்,சட்டங்கள்,முதலான நடைமுறைச்செயற்பாடுகளை சரியான முறையில் முன்வைக்க வேண்டும்.
2.காடுகளின் பயன்பாடு,அவற்றின் முக்கியத்துவம் என்பவற்றைமக்கள் மத்தியில் எடுத்துரைப்பதுடன் காட்டுவளங்களின் பரப்பளவூகுறைவடைகின்றப்போதுஎதிர்நோக்கும் பிரச்சனைகளைதௌpவாகஎடுத்துரைப்பதுடன் கருத்தரங்குமற்றும் பல் உடகங்களின் துனையூடன் அவற்றைமக்கள் விளங்கிக்கொள்ளும் வாய்ப்பைஏற்படுத்துதல்.
3.மீள்காடாக்கம் செய்வதன் மூலம் காட்டுவளத்தை அழிவிலிருந்து ஓரளவு மீட்கக்கூடியதாயிருக்கும்.
4.வரியநாடுகளில் பெரும்பாலும் விறகுகளையேஎரிப்பொருளாகப் பயண்படுத்துகின்றனர். இதனைதவிர்ப்பதற்காக விறகுக்குபதிலாக வேறு சூழலுக்குசார்பான எரிப்பொருளை பயன்படுத்துவதன் முலம் விறகுக்காக அழிக்கப்படும் காடுகளை பாதுகாக்க முடியும்
5.வரியநாடுகளில் தெழில் வாய்ப்பின்மையால் வருமானத்திற்காக சட்டவிநோதமான முறையில் மரங்களை எடுத்தல்,விறகுசேகரித்தல் முதலிய தொழிலகளில் ஈடுப்படுகின்றர்அவர்களுக்குதொழில் வாய்ப்பினைவழங்குவதன் முலம் இவ்வாரு அழிக்கப்படும் காடுகளை பாதுகாக்க முடியும்
6.சூழலின் தாங்குத்திறனை தாண்டக் கூடியவகையில் மந்தைகள் மேய்ப்பதனை தடைசெய்தல் வேண்டும்.
7.காட்டுத்தீ பரவுவதனை முறையாக செய்மதிகள் மூலம் கண்காணித்து அதனை மிகவேகமாக வும், காடுகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தாத வண்ணமும் கட்டுப்படுத்துவதற் குரிய நடவெடிக்கைகளை எடுக்க வேண்டும்.
8.சனத்தொகை அதிகரிப்பினால் ஏற்படுகின்ற காடழிப்பை தடுப்பதற்கு அரசினால் முறையாக திட்டமிடப்பட் குடியேற்ற திட்டங்களை காடுகளுக்கு பாதிப்புஏற்படாதவகையில் அமைத்தல் வேண்டும்.
9.கரையோரகண்டல் தாவரங்களை பாதுகாத்தல்.   
   



No comments:

Post a Comment