Tuesday, April 30, 2019

சிறுவர் பாடல்கள்


   

    1.  கன்று குட்டி

துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டி
கன்று   எங்கள் கன்று குட்டி
எங்களை  சுற்றி ஓடுகிறது
கன்று குட்டி எங்கள் கன்றுக்குட்டி
அம்மாவின் காலை சுற்றுகிறது
எங்கள் கன்று குட்டி கன்று குட்டி

எங்கள் கன்று குட்டி எங்கள் கன்று குட்டி

ஆசையை அம்மாவும் நாக்கால் வருடுகிறாள்
கன்று குட்டி எங்கள் கன்று குட்டி
சுகமாய் நீயும் சொக்கி நிக்கிறாய்
கன்று குட்டி எங்கள் கன்று குட்டி
துள்ளி துள்ளி குதிக்கும் உன்னை
கை கொண்டு பிடிக்க முயற்ச்சி செய்தால்
கைகளுக்குள் சிக்காமல் ஓடுவாய்
கன்று குட்டி எங்கள் கன்று குட்டி
என்னை உன் நண்பனாக
ஏற்றுவாயா ? கன்று குட்டி
எங்கள் கன்று குட்டி

2.நட்பு
நல்ல நல்ல சிறுவனாய்
நட்புடன் பழகுவாய்
வரும் கலங்களி நண்பர் உனக்கு உதவுவர் 
அதுபோல் நீயும் நண்பர்களுக்கு உதவிடு
உள்ளன்போடு பழகுவதை உரிமையோடு பேசுவாய்  உலகம் உன்னை புகழும் வரை உரிமையோடு பழகுவாய்

3. சுட்டி பையன்
என் அம்மா அப்பாவுக்கு  செல்ல பிள்ளை ஒன்று உண்டு அவனுக்கு சின்னா என்ற பெயரும் உண்டு
 படிப்பானாம் சுறு சுறுப்பாக இருப்பதும் வீட்டுக்கு உதவி செய்து சிட்டென எங்கும்  பரப்பனாம்   பெற்றோர் கதைகளை விந்தையுடன் கேட்பனனாம்
சுத்தமான சீருடையில் வகுப்பிலே படிப்பானாம்
எல்லா விளையாட்டும் தெரிந்தவனை சுட்டி சின்ன என்றும் அனைவரும்  அழைப்பாராம் 

4. சூரியன்
வட்ட வட்ட வண்ணமயமான சூரியன்
தக்க தக்க வென மின்னுதே
பல்லாயிரம் தூரம் அது இருந்து
மின்னும் வெளிச்சம் இங்கு வரவே நொடிகள் ஆகுமாம்
எத்தனை வேகம் பார்த்தாயா?
தினம் தினம் தோன்றுமே
காலா நேரம் தவறாமல் கடமைகளை ஆற்றுமே
கடமைகளை ஆற்றுமே
இதை நன்கு உணர்ந்த சூரியன்
ஒருபோதும் கடமை தவறுவதில்லை அதைப்போல் நாமும் உறுதி கொள்வோம்

No comments:

Post a Comment