உங்கள்
பிள்ளைகளின் கைவேலைக்காக புதிய முயற்சிகள்
எடுத்து களைத்துப் போய் விட்டீர்களா... இது உங்களுக்கான ஒரு எளிய
கைவேலைப் பொருள் தயாரிக்கும் முறையாகும்.
கைவேலைப் பொருள் தயாரிக்கும் முறையாகும்.
இது முன்பு
தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட “கரடிக்குட்டியும் கோழிக்குஞ்சும்” என்ற குழந்தைகள்
நிகழ்ச்சியில் வரும் கரடிக்குட்டியின் முகம் போல காட்சியளிக்கும். செய்து
பாருங்கள்... அசந்து விடுவீர்கள்..
செய்முறை
Ø
முதலில் பலூனை ஊதிக் கட்ட வேண்டும்.
Ø
பின்னர் உங்கள் வீடில் உள்ள பழைய பத்திரிகைகளைத்
துண்டு துண்டாகக் கிழித்துத் தண்ணிரில் இரவு முழுக்க நன்றாக ஊற வைக்கவும்.
Ø
மறுநாள் அவற்றை கைளால் நன்கு பிசைந்தால்
காகிதக் கூழாக வரும்.
Ø
பின்பு இந்தக் கூழை பலூனின் மேல் மிகத்
தடித்த படலமாக சம அளவில் பரவ வேண்டும்.
Ø
இதற்கு பசையும் பாவிக்க வேண்டும். சுவரில்
பேப்பர் ஒட்டும் பசை அல்லது நாங்களாக நீரைக் கொதிக்க வைத்து சிறிது ஆற விட்டு
மாவைக் கலந்தும் பசை போல செய்யலாம்.
Ø
அதன் பின்னர் ஓரிரு நாட்கள் நன்றாக காய
விட்டு செய்ய வேண்டிய முகத்திற்கு ஏற்ற அளவில் வெட்ட வேண்டும்.
Ø
அடுத்ததாக ஒரு சிறிய பலூனில் இது போலச்
செய்து அரை வட்டமாக வெட்டி மூக்குப் போன்று முகத்தில் ஒட்ட வேண்டும். (படத்தில்
உள்ளவாறான மண்ணிறம் பூசிய பகுதி)
Ø
பின்னர் முகம் போல வெட்டிய பகுதி நன்கு
காய அதற்கு மஞ்சள் நிறம் தீட்ட வேண்டும்.
Ø
மேலும் அதன் கண்களிற்கு இரண்டு வட்டம்
வெட்ட வேண்டும்
Ø
தோல் துணியில் காது உரு வரைந்து வெட்டி,
பசையால் காதுகளை உரிய இடத்தில் ஒட்ட வேண்டும்.
இதோ அருமையான கரடிக்குட்டி தயாராகி விட்டது... பழைய கால உருவம் என்று
நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு கொண்டு செல்லும் பொது மிகவும்
வித்தியாசமாக இருக்கின்றது என்று எல்லோரிடமும் பாராட்டுப் பெறுவார்கள்.. நீங்களும்
தான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவீர்கள்.
No comments:
Post a Comment