Friday, March 30, 2018

சிறுவர் கவிதைகள்

பட்டாம்பூச்சி!
சின்னச் சிறகை விரித்தே
சீராய் பறக்கும் பூச்சி
பட்டுப் போல அழகாய்
பறக்கும் பட்டாம் பூச்சி

Thursday, March 29, 2018

உங்கள் குழந்தை நன்றாக தூங்க வேண்டுமா..?



 இந்த விஷயங்களை எல்லாம் செய்யுங்கள்..!
குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது. உங்கள் குழந்தையின் தூக்கம் மற்றும் 

குழந்தையை தூங்க வைக்கும் முறைகள் பற்றி, பெற்றோராக நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். குழந்தைகள் இந்த பருவத்தில் தூங்காமல் வேறு எப்போது தூங்கி ஓய்வெடுக்க முடியும்? குழந்தைகள் நன்கு உறங்கினால் தான் அவர்களின் உடல் மற்றும் மூளை 

Tuesday, March 27, 2018

உங்கள் குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா?



 இவற்றை செய்யுங்கள்... தானாகவே விரும்பி சாப்பிடுவார்கள்...
தினமும் உங்கள் வீட்டில் ஒரு மரக்கறி சாப்பிட போரே நடக்குதா.? காய்கறிகள் பிடிக்காமல் உங்கள் குழந்தைகள் ஓடி ஒழிந்து கொள்கிறார்களா.? எவ்வளவு காலம் துரத்தி துரத்தி ஊட்டுவீங்க. சாப்பாட்டுக்குள் மறைத்து, விளையாட்டு காட்டி ஊட்டும் பழைய கதைகள் எல்லாம் இப்போது சாத்தியமாகாது. இப்ப இருக்கிற குழந்தைகளின் உணவு முறையே மாறி விட்டது. நொறுக்கு தீனிகளும், பீட்சா, சாக்லெட், பர்கர் என்று குழந்தைகளை சுற்றி சுற்றி வரும் உணவுகளுக்கு மத்தியில் இது சாத்தியமாகுமா. கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

புது ட்ரிக்ஸ்
உங்கள் பழைய ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்கே ஆகாது. இப்ப இருக்கிற 

Tuesday, March 13, 2018

Friday, March 9, 2018

Building Blocks மூலம் பலவிதமான மிருகங்கள் உருவாக்குதல் - வீடியோ

குழந்தைகளுக்கான அன்பான பரிசு தயாரித்தல் தமிழ் மற்றும் ஆங்கிலம்


உங்கள் செல்லக் குழந்தைகளின் Socks (சாக்ஸ்) பயன்படுத்தி அழகிய பொம்மை செய்வது எப்படி?
பொம்மைகள் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகள் தான் அவற்றை அதிகம் விரும்புவார்கள். அது மட்டுமன்றி அனைவரும் எங்களது வீடுகளை இது போன்ற பொம்மை வடிவிலான  விலங்குகளை வைத்து அலங்கரிக்கிறோம். குழந்தைகள், விளையாடவும் இவை மிகவும் சிறந்த பரிசுப் பொருளாக இருக்கும்.
இவ்வாறான துணிகளினாலான விலங்கு பொம்மைகள் பொதுவாக  

Wednesday, March 7, 2018

உங்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?


ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள், ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.
ஞாபகம் குறித்து சில தகவல்கள்:
·         நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும்.

Tuesday, March 6, 2018

26 விசேடமான ஆண்டுகளும் விழாக்களும்

01 வது ஆண்டு     கடதாசி விழா

02 வது ஆண்டு    பருத்தி /பஞ்சு விழா

03 வது ஆண்டு    தோல் விழா

Monday, March 5, 2018

சிறுவர் அச்சுப்பதித்தல் சித்திரம் வீடியோ - Thumb Painting for Kids

சிறுவர்களுக்கான உருவங்கள் ,காட்சிகள் மற்றும் சிறுகதைகள்  என்பன அச்சுபத்தித்தல் சித்திரம் மூலம் வரைந்துகொள்ளலாம் குறிப்பிட்ட உருவம் ஒன்றை தெரிவு செய்து பென்சில் மூலம் முதலில் அடையாளப்படுத்திய பின்  பொருத்தமான வர்ணங்களைகொண்டு இலை, வெட்டப்பட்ட வெண்டிக்காய் ,கைவிரல் இரேகை அல்லது வேறு வடிவில் உள்ள அச்சுக்களை வர்ணத்தில் தொட்டு வரைப்படத்தின் பொருத்தமான இடங்களில் அச்சுபதித்தல் வேண்டும் .
இதன் மூலம் சிறுவர்களின் சிந்தனை ஆற்றல் மற்றும் ஆளுமை விருத்தியடையும்


Sunday, March 4, 2018

சிறுவர்களின் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை வளர்க்க சிறந்த வழிமுறைகள்


நீங்கள் முன்மதிரியனவர்களாக இருக்க வேண்டும் – be a good model
நீங்கள் எல்லா நேரத்திலும் சரியனவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை ஆனால் சரியான உணவுபழக்கம்  உடல் ரீதியான சுறுசுறுப்பு ,முயற்சிகள் என்பவற்றை அவர்கள் உற்றுநோக்குவார்கள் எனவே உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியமானது உங்கள் நல்ல பலக்கவலக்கதிலேயே உள்ளது
நற்சிந்தனை - Positive things

சிறுவர்களால் செய்ய முடியாது என சொல்பவற்றை இலகுவாக செய்துமுடிக்க வழிகளை தெரியப்படுத்திக்கொடுங்கள் அவர்கள் எப்பவுமே வெற்றியையே விரும்புவார்கள் அதனால் சிறிய வெற்றியாக இருந்தாலும் அதனை பெரிதுபடுத்தி  கொண்டாடுங்கள் தங்களுக்கென்ற ஒரு சாயல் ஒன்றை உருவாக்க இடம் கொடுங்கள் .
குடும்பத்தின் ஒற்றுமையை தன்மையினை அதிகரியுங்கள்
get the whole family moving
குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து உண்ணுங்கள்,நடை பயிற்சி செய்யுங்கள் ,தோட்டங்கள் மற்றும் சிறந்த தோட்டங்களை உருவாக்குங்கள் வீட்டில் சிறிய போட்டிகளை வைத்து அவர்களை வெற்றி பெறச்செய்யுங்கள் விட்டில் உள்ளவர்கள் அனைவரும் சந்தோசத்துடன் கைதட்டி வாழ்த்து சொல்லுங்கள் .
யதார்த்தமாக இருங்கள் - Be realistic

எப்போதுமே யதார்த்தமாக அவர்களுடன் இருங்கள் சிறிய வரமுறைகள் கட்டுப்பாடுடன் இருங்கள் சிறிய மாற்றங்கள் படிப்படியான வளர்ச்ச்சியை ஏற்படுத்துங்கள் அவர்களின் வயது வளர்ச்சியை உற்று நோக்கி செயற்படுங்கள்.
தொலைக்காட்சி ,வீடியோ கேம் மற்றும் கணணி பயன்பாட்டை  
- Limit the use of  electronic entertainments
தொலைக்காட்சி ,வீடியோ கேம் மற்றும் கணணி என்பவற்றை பயன்படுத்தும்போது உணவு பழக்க வழக்கங்கள் வேறுபடுவதோடு அவர்களின் உடல் நிலை சுறுசுறுப்பு என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்
அவர்களின் செயற்பாடுகளை உட்சாகப்படுத்துங்கள் 
Encourage the self or physical activities

சிறுவர்களுக்கு பிடித்த விடயத்தை அடையும் வரை தேடுதலில் ஈருடுபடுவார்கள் அவற்றிற்கு உதவி செய்யுங்கள் அப்போது உக்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவார்கள்

கடதாசிதால்களில் சிறந்த 5 உருவங்கள் அமைத்தல் -best 5 paper crafts


வீடியோ இணைப்பினை பார்வையிடுவதன் மூலமாக சிறுவர்களின் சிறந்த சிந்தனை ஆற்றலை மேம்படுத்த முடியும் அத்துடன் பாடசாலையில் அவர்களின் இடப்படவிதான செயற்பாடுகளில் செயற்படுத்தி காட்டமுடியும்